சுடச்சுட

    

    பால் விலை உயர்வைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By DN  |   Published on : 01st November 2014 01:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பால் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கட்சியின் ஒன்றியக் குழுச் செயலர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.மோகன் 

    சிறப்புரையாற்றினர்.

    ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டதால் குழந்தைகள், நோயாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல, மின் கட்டணத்தையும் 10 முதல் 30 சதம் வரை உயர்த்த அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி வருகிறது. அவ்வாறு மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், சிறு,

    குறுந் தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும்.

    எனவே, பால் விலை உயர்வை அரசு திரும்பப் பெறுவதுடன், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    கட்சி நிர்வாகிகள் எஸ்.முத்து, கே.குமார், எம்.ஜெயபிரகாஷ், எம்.சக்திவேல், ஏ.காசிவிஸ்வநாதன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai