சுடச்சுட

  

  உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

  By நாமக்கல்  |   Published on : 02nd November 2014 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு மாரடைப்பால் உயிரிழந்த நாமக்கல் மாவட்ட அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த நிதிக்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சனிக்கிழமை அளித்தார்.

  நாமக்கல் மாவட்டம் மலைவேப்பங்குட்டையைச் சேர்ந்த அதிமுக கிளை மேலவை பிரதிநிதி பெருமாள்(63), செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோல், மாவட்டம் முழுவதும் அதிமுகவினர்

  7 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தீர்ப்பைக் கேட்டு உயிரிழந்த அதிமுகவினரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று

  ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி, உயிரிழந்த மலைவேட்டங்குட்டை பெருமாளின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதிக்கான காசோலையை தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, பெருமாளின் மனைவி தெய்வானை, அவரது மகள்கள் பர்வதம், தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோரிடம் சனிக்கிழமை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், கொல்லிமலை ஒன்றியக்குழுத் தலைவர் சந்திரசேகரன், கட்சியின் மாநில மகளிரணி இணைச் செயலர் வி.சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai