சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் கே.எஸ்.மணியம் வித்யாபவன் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் "தூய்மை இந்தியா' குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

  கே.எஸ்.மணியம் கல்லூரி முதல்வர் சிக்கந்தர்பாஷா தலைமை வகித்தார். வேலூர் காவல்துறை உதவி ஆய்வாளர் விஜயராஜ் கொடியசைத்து பேரணியைத் தொடக்கி வைத்தார்.

  பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு குப்பைகளை பொது இடங்களில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் உமிழ்தல்,சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களைத் தவிர்த்து பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக மக்கும் தன்மையுள்ள காகித மற்றும் துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் கே.எஸ்.மணியம் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai