சுடச்சுட

  

  தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

  By திருச்செங்கோடு  |   Published on : 02nd November 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.

  திருச்செங்கோடு அருகேயுள்ள அவினாசிப்பட்டியில் ராமாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. செயலராக இருக்கும் சுப்பிரமணியத்துக்கு வங்கியில் அலாரம் ஒலிப்பதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அவர் வங்கிக்கு விரைந்தார். வங்கி ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்து வரச்செய்தார். வங்கியின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. திடீரென அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டு ஓடிவிட்டனர்.

  வங்கியை ஆய்வு செய்தபோது பணம், பொருள் எதுவும் திருட்டு போகவில்லை என்று தெரிய வந்தது. இதுகுறித்து வங்கிச் செயலர் சுப்பிரமணியம் எலச்சிபாளையம் போலீஸில் புகார் அளித்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai