சுடச்சுட

  

  பால் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாமக்கல்லில் அண்ணா சிலை முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கட்சியின் நகரச் செயலர்

  என்.தம்பிராஜா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர்.குழந்தான், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் என்.ஜீவானந்தன் சிறப்புரையாற்றினர்.

  ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தம் மூலம் நியாய விலையில் பால் வழங்குவதற்கு பதிலாக விலையை உயர்த்தியிருப்பது தவறான நடவடிக்கையாகும்.

  இந்த விலை உயர்வின் அடிப்படையில் மேலும் பல பொருள்களின் மீது விலையேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல், மின்சாரக் கட்டணத்தையும் 10 முதல் 30 சதம் வரை உயர்த்த அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி வருகிறது. அவ்வாறு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டால் சிறு, குறுந் தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும்.

  எனவே, பால் விலை உயர்வை அரசு திரும்பப் பெறுவதுடன், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

  குமாரபாளையத்தில்...: பால் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கணேஷ்குமார், நகர துணைச் செயலர் பாலசுப்பிரமணி, வடக்கு ஒன்றியச் செயலர் அர்த்தனாரி, நிர்வாகிகள் கார்த்திக், எஸ்.பி.நஞ்சப்பன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  திருச்செங்கோட்டில்...: பால் விலை உயர்வைக் கண்டித்து திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

  நகரச் செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் எஸ். மணிவேல் பேசினார். பொறுப்பாளர்கள் தனசேகரன், ஜெயராம், கோவிந்த், சுப்பிரமணி, முனுசாமி, ராமலிங்கம், சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பால் விலை உயர்வை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai