Enable Javscript for better performance
10-ம் வகுப்பு மாணவிதீ விபத்தில் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி தீ விபத்தில் உயிரிழந்தார்.

    பொத்தனூர் வெங்கமேடு பெரியார் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் கோபிகா (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த மாதம் 2-ம் தேதி இரவு சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக கோபிகாவின் உடலில் தீ பற்றிக்கொண்டது.

    இதைப் பார்த்த அவரது தந்தை பரமசிவம் மகளின் உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றார். அப்பொழுது அவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. தீக் காயம் அடைந்த இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த காயமடைந்த கோபிகா தீவிர சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். தீ விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai