சுடச்சுட

  

  கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.70 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

  By திருச்செங்கோடு  |   Published on : 03rd November 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 1800 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்துக்கு சனிக்கிழமை விற்பனையானது.

  ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து இந்த மஞ்சள் விற்பனைக்கு வந்தது.

  இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.

  ஏலம் மூலம் ரூ.70 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.5649 முதல் ரூ. 8199 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.4798 முதல் ரூ.6389 வரை விலை போனது. பனங்காளி ரகத்திற்கு ரூ.8500 முதல் ரூ.10189 வரை விலை கிடைத்தது.

  மஞ்சள் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மஞ்சள் வரத்து ஈரோடு சந்தையைவிட அதிகமாக இருந்தது. ஈரோடு சந்தையைவிட குவிண்டாலுக்கு ரூ.500 அதிகம் கிடைத்தது என்று கூட்டுறவுச் சங்கத்தின் மேலாண் இயக்குநர் லோகநாதன் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai