சுடச்சுட

  

  பரமத்திவேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை சரிவு

  By பரமத்திவேலூர்,  |   Published on : 03rd November 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   பரமத்திவேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை சரிவடைந்துள்ளதால், வாழைப் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  பரமத்திவேலூர் வட்டத்தில் பாண்டமங்கலம், பொத்தனூர், குச்சிபாளையம், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

  இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. வாழைத்தார்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கின்றனர்.

  வாழைத்தார்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டுகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400-க்கும், பச்சைலாடன் வாழைத்தார் ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் ஏலம் போனது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.310-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைலாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனையானது.

  வாழைத்தார்களின் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். வாழைத்தார்களின் விலை சரிவடைந்துள்ளதால், வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai