சுடச்சுட

    

    வாக்காளர் சுருக்க முறை திருத்தம்: 20,562 படிவங்கள் அளிப்பு

    By நாமக்கல்,  |   Published on : 03rd November 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ள நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 20,562 பேர் படிவங்கள் அளித்துள்ளனர். மேலும், படிவங்கள் அளிக்க நவம்பர் 10-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது என்று வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்புப் பார்வையாளர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

    வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்திலுள்ள 1,534 வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அத்தனூர், ராசிபுரம், களங்காணி, நாமக்கல்லிலுள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்புப் பார்வையாளரும், ஆவணக் காப்பகம், வரலாற்று ஆராய்ச்சித் துறையின் ஆணையருமான எம்.ஏ.சித்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பேசியது: வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அல்லது 01.01.2015 அன்று 18 வயது நிரம்ப உள்ள இளம் வாக்காளர்கள் அனைவரையும் கட்டாயம் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அறிவுறுத்துவதுடன், அவர்களைக் கட்டாயம் வாக்காளர்களாகச் சேர்க்க உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல, கிராமங்கள், நகர்ப்புற பகுதிகளிலும் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்வதுடன், விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ உடனடியாக அதற்குரிய படிவங்களை உரிய முறையில் நிறைவு செய்து, தேவையான ஆவணங்களோடு இணைத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சுமார் 19,249 படிவங்கள் நேரடியாகவும், 1,313 படிவங்கள் இணையதளம் மூலமாகவும் என மொத்தம் 20,562 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து, 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

    மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி, கோட்டாட்சியர்கள் க.காளிமுத்து (நாமக்கல்), ரெ.சுமன் (திருச்செங்கோடு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai