சுடச்சுட

    

    உதவித்தொகை ரத்து செய்யப்பட்டதாக மாற்றுத்திறனாளிகள் புகார்

    By நாமக்கல்  |   Published on : 04th November 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் மாதாந்திர உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டி மாற்றுத்திறனாளிகள் பலர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து தகுதியற்றவர்கள் எனக்கூறி மாவட்டம் முழுவதும் 22,000 பேரின் ஓய்வூதியம், மாத உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது. இதில், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்து வந்த உதவித்தொகையும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் முன்னேற்றச் சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், அரசாணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட வயது, மாற்றுத் திறன் தன்மை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவும், வருமான உச்ச வரம்பு முற்றிலும் நீக்கப்பட்டும் உள்ளது. இப்படியிரு க்கையில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் மாத உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் பலரும் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். மேலும், ஒரு வயது முதல் 18 வயது வரை மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு தமிழகத்தில் மருத்துவக்குழு அமைத்து அதன்படி வட்டாட்சியர் அலுவலகம் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் மாத உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எனவே, அரசாணைப்படி ரத்து செய்யப்பட்ட உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பெற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இக்கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai