சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் வெற்றிலை ஏலச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலையின் விலை சரிவடைந்துள்ளதால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர்.

  கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் (104 கவுளிகள் கொண்ட சுமை ஒன்று) வெள்ளைக்கொடி இளம்பயிர் வெற்றிலை ரூ.3,500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ரூ.3,000-த்திற்கும் ஏலம் போனது.

  முதியம் பயிர் வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ஒன்று ரூ.2,000-த்திற்கும், முதியம் பயிர் கற்பூரி வெற்றிலை சுமை ஒன்று ரூ.1,800-க்கும் ஏலம் போனது. திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி இளம்பயிர் வெற்றிலை ரூ.3,000-த்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ரூ.2,500-க்கும் ஏலம் போனது. முதியம் பயிர் வெள்ளை வெற்றிலை சுமை ஒன்று ரூ.1,250-க்கும், முதியம் பயிர் கற்பூரி வெற்றிலை சுமை ஒன்று ரூ.1,300-க்கும் ஏலம் போனது.

  தற்பொழுது வெற்றிலையின் வரத்து அதிகரித்துள்ளதால் வெற்றிலையின் விலை சரிவடைந்துள்ளதாக வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai