சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 198 பயனாளிகளுக்கு ரூ.9.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

  மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு உதவித் தொகைகள், புதிய குடும்ப அட்டைகள், அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 1,712 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது இரு வாரங்களில் தீர்வு காண துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

  தொடர்ந்து, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்துக்கு உட்பட்ட இயற்கை மரணமடைந்த 28 பேரின் குடும்பத்தினருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.3.50 லட்சமும், திருமண நிதியுதவியாக 7 பேருக்கு ரூ.62,000மும், 83 பேரின் குழந்தைகளுக்கு ரூ.2.30 லட்சம் கல்வி உதவித்தொகையும், ராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த 80 பேரின் குழந்தைகளுக்கு ரூ.3,14,750 மதிப்பிலான கல்வி உதவித்தொகையும் என மொத்தம் 198 பயனாளிகளுக்கு ரூ.9,56,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பி.கருப்பையா, கலால் உதவி ஆணையர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிóட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai