Enable Javscript for better performance
சிவன் கோயில்களில்  நாளை அன்னாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில், கூட்டப்பள்ளி ஸ்ரீ செளந்தரநாயகி சமேதராக அருள்மிகு சந்திரமெளலீஸ்வரர் கோயில்களில் வியாழக்கிழமை (நவ.6) மாலை அன்னாபிஷே விழா நடைபெற உள்ளது.
     கைலாசநாதர் கோயிலில், அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டத்தினர் சார்பில், அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, இசைக் கருவிகளுடன் திருமுறை இன்னிசையும் நடைபெற உள்ளது. கூட்டப்பள்ளி ஸ்ரீ சந்திர மெüலீஸ்வரர் கோயிலில் அன்ன அலங்காரம், மூலமந்திரங்களால் சிறப்பு ருத்ர ஹோமம்,
     16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai