சுடச்சுட

    

    செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு:  தனியார் நிறுவன ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை

    By  நாமக்கல்,  |   Published on : 05th November 2014 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில், கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் என அச்சமடைந்த மக்கள் தங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நிறுவன ஊழியர்களை செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ளது திருநீலகண்டர் தெரு. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், அந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் உயர்கோபுரம் அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகளை மேற்கொண்டது. அங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு சுற்றுப்பகுதி மக்களை பெருமளவில் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
     தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்க இடைக்காலத் தடையைப் பெற்றனர்.
     இந்த நிலையில், அந்த நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனராம். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்து விரைந்து வந்த நாமக்கல் காவல் நிலைய போலீஸார், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தீர்வு ஏற்படாததால், பேச்சுவார்த்தை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai