சுடச்சுட

  

  தலைமையாசிரியையிடம் 9 பவுன்  தங்க தாலிச் சங்கிலி பறிப்பு

  By திருச்செங்கோடு  |   Published on : 05th November 2014 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு அருகே தலைமையாசிரியையின் 9 பவுன் தங்க தாலிச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம இளைஞர்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனர்.
   திருச்செங்கோடு அருகேயுள்ள காளிப்பட்டி தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக சரஸ்வதி (57) பணிபுரிந்து வருகிறார். இவர் திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து பாரதியார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம இளைஞர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க தாலிச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai