சுடச்சுட

  

  திருச்செங்கோட்டில்  சந்தனக்குட உரூஸ் திருவிழா

  By  திருச்செங்கோடு,  |   Published on : 05th November 2014 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள காஜா அகமது அலிசாவின் சந்தனக்குட உரூஸ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   திருச்செங்கோடு நந்தவனத் தெரு இதயத்துல்லா இல்லத்திலிருந்து சந்தனக்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தர்காவை அடைந்தது. அங்கு மொகரம் பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கு திருச்செங்கோடு முத்தவல்லி முபாரக் லியாகத் அலி தலைமை வகித்தார். அஜாத் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழஙகப்பட்டது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai