சுடச்சுட

    

    பால் விலை உயர்வு: விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 05th November 2014 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பால் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     அண்ணா சிலை முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் மு.பெ.குமணன் தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் பழ.பாலு வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ஆர்.கபிலன், மாவட்ட துணைச் செயலர்கள் த.ஆற்றலரசு, ம.செம்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாகி வரும் பால் விலையேற்றத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும். இலங்கை நீதிமன்றத்தில் தமிழக மீனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கமிட்டனர்.
     இதில், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ஆர்.வசந்தன், சு.சுடர்வளவன், இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்டச் செயலர் பழ.மணிமாறன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டச் செயலர் க.வைகறைச் செல்வன், கொத்தடிமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் பெ.செங்குட்டுவன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai