சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே முதியவரை கொடுவாளால் வெட்டியதாக இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
     ராசிபுரம் அருகே, சந்திரசேகரபுரத்தைச் சேர்ந்தவர் பூபதி (24). லாரி பாடிபில்டிங் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவாவுக்கும் (21) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
     இந்தத் தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஜீவாவை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லையாம். இதையடுத்து, ஆத்திரமடைந்த பூபதி, சி.எஸ்.புரம் அக்ரஹாரத்தில் உள்ள ஜீவா வீட்டுக்குச் சென்று, அவரது தாத்தா சின்னப்பனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டாராம்.
     தொடர்ந்து, வீட்டில் இருந்த கொடுவாளால் சின்னப்பனை வெட்டினாராம்.
     இதில் அவருக்கு கழுத்து, கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     இதுகுறித்து ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai