Enable Javscript for better performance
ராசிபுரம் அருகே கோயிலில் சாட்டையடி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே கோயிலில் சாட்டையடி திருவிழா

    By  ராசிபுரம்,  |   Published on : 05th November 2014 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் பக்தர்களை பூசாரி சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     ராசிபுரம் அருகே அத்திப்பலகானூரில், ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழா ஐப்பசி மாதம் நடைபெறும். விழா, செவ்வாய்க்கிழமை (நவ.4) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடைபெற உள்ளது.
     விழாவின் முக்கிய நிகழ்வான, பூவோடு எடுத்தல், சாட்டையடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அம்மனை வழிபட்டு உருளுதண்டம் செலுத்தினர். பின்னர் தங்களின் வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் கோயில் பூசாரியிடம் வரிசையில் நின்று சாட்டையடி பெற்றனர். இதில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களும் பங்கேற்றனர். சாட்டையடி பெறுவதால் வேண்டுதல் நிறைவேறும் என பக்தர்கள் நம்புவதால், இதுபோன்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
     நவ.5-ஆம் தேதி அழகு குத்துதலும், நவ.7-ஆம் தேதி, கம்பம் எடுத்தலும், நவ.8-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
     இதே போல, ராசிபுரம் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியாண்டிம்மன், ஆஞ்சநேயர் கோயில்களின் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மாரியம்மன் கோயிலுக்கு அம்மன் பூவோடு எடுத்து வருதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் பூசாரி பூவோடு எடுத்து வந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai