சுடச்சுட

  

  வேலகவுண்டம்பட்டி பள்ளியில் தமிழ் நாடகப் போட்டி

  By நாமக்கல்,  |   Published on : 05th November 2014 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் நாடகப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
   மாணவ, மாணவிகள் 4 பிரிவுகளாகப் பிரிந்து வேலுநாச்சியார், பாஞ்சாலிசபதம், பாரதி, தெனாலிராமன் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற நாடகங்களில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
   நாமக்கல் அரசுக் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கந்தசாமி, நாமக்கல் கந்தசாமி கண்டர் கல்லூரி உதவிப் பேராசிரியர் சு.விமல், ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலைக் கல்லூரி உதவிப் பேராசியர் பழனிச்சாமி, நாமக்கல் டிரினிடி மகளிர் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியை லதா, ராசிபுரம் எஸ்.ஆர்.பி. கல்வியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பொன்னுசாமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு, பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்வு செய்தனர்.
   அந்தப் பள்ளியின் ஆலோசகர் ராஜன், தலைவர் ராஜா, துணைத் தலைவர் நல்லையன், செயலர் சிங்காரவேலு, ராஜராஜன், ராஜேந்திரன், முதல்வர் சகுந்தலாமாகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai