சுடச்சுட

  

  அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு வரும் மாடுகளை பூசாரிகளுக்கு வழங்க வலியுறுத்தல்

  By திருச்செங்கோடு  |   Published on : 06th November 2014 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு உள்பட்ட கோயில்களுக்கு நேர்த்திக் கடனாக வரும் மாடுகளை கோயில் பூசாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

  இதுகுறித்து இந்தச் சங்கத்தின் சார்பில், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையரிடம் புதன்கிழமை அளித்த மனு:

  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாகர் பள்ளம், படிகள் பாதை, 60-ம் படி, நகரில் உள்ள கோயில்களுக்கு ஆடு, கோழி, மாடுகளை நேர்த்திக் கடனாக வழங்குகின்றனர். இதில், ஆடு, கோழிகள் அனுமதி பெற்று ஏலம் விடுவதுடன், அனுமதி பெறாமல் மாடுகளையும் ஏலம் விடுவதாகத் தெரிகிறது. ஏலம் எடுத்தவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்புப் பலகையை ஒப்பந்ததாரர் வைக்க வேண்டும். மலைக் கோயிலில் உள்ள மாடுகளையும், கீழ்க் கோயில்களில் தானமாக அளிக்கப்பட்ட மாடுகளையும் பூசாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மனுவை கோயில் பூசாரிகள் நலச்சங்க மாவட்டச் செயலர் கேசவன், நகரச் செயலர் அர்த்தநாரி, ஒன்றியத் தலைவர் சரவணன், செயலர் குப்புசாமி ஆகியோர் அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai