Enable Javscript for better performance
இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பொறியாளர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பொறியாளர் சாவு

    By திருச்செங்கோடு,  |   Published on : 06th November 2014 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோட்டில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பொறியாளர் உயிரிழந்தார்.

    திருச்செங்கோடு, வேலூர் சாலை வாலரைக்கோட்டையைச் சேர்ந்த செங்கோடன் மகன் கெளரிசங்கர் (29). பொறியாளர். இவர் புதன்கிழமை தனது ஸ்கூட்டரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வாலரைக்கேட் இறக்கத்தில் சென்ற போது, பின்புறம் வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கௌரிசங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நிற்காமல் சென்ற அந்தக் காரை மொளசியில் போலீஸார் பிடித்தனர். காரை ஓட்டி வந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜெயச்சந்திரனை(34) கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai