சுடச்சுட

  

  சின்ன வெங்காயம் சாகுபடி: நவ.13-இல் தொழில்நுட்பப் பயிற்சி

  By நாமக்கல்,  |   Published on : 06th November 2014 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சின்ன வெங்காயத்தில் உயர் தொழில்நுட்ப சாகுபடி குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் வியாழக்கிழமை (நவ.13) அளிக்கப்பட உள்ளது.

  இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ.13) காலை 9 மணிக்கு நடைபெற உள்ள இந்தப் பயிற்சி வகுப்பில், சின்ன வெங்காயத்தில் உள்ள உயர் ரகங்கள், கோ-5 ரக நாற்று உற்பத்தி, நாற்றங்கால் மேலாண்மை, நடவு வயல் தயாரிப்பு, சொட்டு நீர்ப்பாசனம், உர நிர்வாகம், களை நிர்வாகம், பூச்சி, நோய் நிர்வாக முறைகள், சேமிப்பு முறைகள் குறித்த அனைத்துத் தொழில்நுட்பப் பயிற்சியளிக்கப்பட உள்ளது.

  இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் பங்கேற்கலாம்.

  விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 12-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04286-266345, 266244, 266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai