Enable Javscript for better performance
ராசிபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

    By ராசிபுரம்,  |   Published on : 06th November 2014 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் ரோட்டரி சங்கம், வித்யாநிகேதன்

    மேல்நிலைப் பள்ளி சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில், 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

    இறுதிச் சுற்றில் சேலம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், பள்ளிபாளையம் எஸ்.பி.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் மோதின.

    இதில், அதிக புள்ளிகளைப் பெற்ற சேலம் லிட்டில் பிளவர் பள்ளி முதலிடம் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற இந்த அணிக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 110 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி சங்கச் செயலர்கள் கதிரேசன், மஸ்தான் ஆகியோர் பரிசு வழங்கினர். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை அந்தப் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai