சுடச்சுட

    

    அரசு மாணவிகள் விடுதி சமையலர்பணியிடை நீக்கம்

    By ராசிபுரம்  |   Published on : 07th November 2014 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் அருகே, முள்ளுக்குறிச்சி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதி சமையலரை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

    இந்த விடுதியின் சமையலர் திலகவதி சரிவர மாணவிகளுக்கு உணவு சமைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுதி மாணவி ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவு சரியில்லாததால், அந்த மாணவி உணவைச் சாப்பிடாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து, கூறப்பட்ட புகாரின் பேரில், நாமக்கல் கோட்டாட்சியர் க.காளிமுத்து, மாவட்டப் பிற்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் கருப்பையா ஆகியோர் நேரில் விசாரணை நடத்த ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, உணவை சரியாக சமைத்து தராததால் சமையலர் திலகவதியை பணியிடை நீக்கம் செய்தும், பிற விடுதி சமையலர்கள் சுகாதார முறையிலும், பாதுகாப்பான வகையிலும் தரமாக உணவு தயாரித்து மாணவ - மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai