சுடச்சுட

  

  சாரண ஆசிரியர்களுக்கு முன்னோடி பயிற்சி முகாம்

  By ராசிபுரம்,  |   Published on : 07th November 2014 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரியில் சாரண - சாரணிய ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் அக்.31-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை ஏழு நாள்கள் நடைபெற்றது.

  இந்தப் பயிற்சியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 45 ஆசிரியர்கள், 45 ஆசிரியைகள் என 90 பேர் பங்கேற்றனர். இதில், மாநில பயிற்றுநர்கள் ஏகாம்பரம், ஜெ.சக்திவேல், நா.நாகராஜன், வேணுகோபால், ரெகமுனிஷா, ரூத்பேபி, பாரதி ஆகியோர் பங்கேற்று, தலைமையேற்றல், ஆற்றல்கலை, முகாம்கலை, கயிற்றுக்கலை, முதலுதவி, நிலப்படம், சர்வசமய வழிபாடு ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சியளித்தனர். மேலும், கூனவேலம்பட்டி அருகேயுள்ள சித்தர்மலைக்கு நடை பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சியளித்தனர்.

  வட்டார சுகாதார ஆய்வாளர் எஸ்.ஹரிஹரசுப்பிரமணியம் டெங்குநோய் குறித்த பயிற்சியளித்தார்.

  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் முகாமை பார்வையிட்டு, பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.

  நிறைவு விழாவில், சாரணர் இயக்க நிதிகாப்பாளரும், வித்யா விகாஸ் கல்வி நிறுவன இயக்குநருமான கே.எஸ்.பழனியப்பன், கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனத் தாளாளர் க.சிதம்பரம், மாவட்ட பயிற்சி ஆணையர் ஆர்.ராஜன், அமைப்பு ஆணையர் ஆர்.ரகோத்தமன், மாவட்ட பயிற்சி இயக்கச் செயலர் பி.வி.குமார், உதவிச் செயலர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai