சுடச்சுட

    

    தூய்மை இந்தியா திட்டம்: நாமக்கல் நீதிமன்றத்தில் தொடக்கம்

    By நாமக்கல்,  |   Published on : 07th November 2014 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரத பிரதமர் அறிவித்த தூய்மை இந்தியா திட்டப் பணிகள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

    அந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணராஜா தலைமை வகித்து துப்புரவுப் பணிகளை தொடக்கிவைத்தார்.

    தொடர்ந்து, வழக்குரைஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் அனைவரும் நீதிமன்ற அலுவலகம், வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த தூய்மை பணி தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு நீதிமன்ற உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியம், ஆர்.மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டித் தலைவர் எஸ்.செல்வம், தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கச் செயலர் கா.சுப்பராயன், வழக்குரைஞர்கள் இதயதுல்லா, மனோபாலன், கோபாலகிருஷ்ணன், நுகர்வோர் புலனாய்வு கமிட்டி மாநிலச் செயலர் எம்.ஆறுமுகம், நாமக்கல் மாவட்டச் செயலர் கே.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai