Enable Javscript for better performance
பால்காரரைத் தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பால்காரரைத் தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 07th November 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாண்டமங்கலத்தில் பால்காரரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    பரமத்திவேலூர், பாண்டமங்கலம் அருகேயுள்ள வேலாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (50). பால் வியாபாரி. இவர் புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பாண்டமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, வேலாகவுண்டம்பாளையம் சாலையில் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தினராம். அவர்களிடம் சாலையில் அமர்ந்து ஏன் மது அருந்துகிறீர்கள் என ஆனந்தன் கேட்டாராம்.

    இதையடுத்து, ஆனந்தனுக்கும் மது அருந்தியவர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாம். அப்போது, அங்கு வந்த சிலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினராம். பின்னர், பாண்டமங்கலத்தைச் சேர்ந்த மணி மகன் செந்தில் (30), மருதகண்டர் மகன் செந்தில்குமார் (36), குப்புசாமி மகன் விக்னேஷ் (22), சேகர் மகன் குமார் (23) ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை காலை ஆனந்தனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த ஆனந்தன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக நான்கு பேரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai