சுடச்சுட

    

    விஜய விநாயகர் கோயிலில் நவ. 10-இல் மகா கும்பாபிஷேகம்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 07th November 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், அண்ணாநகர் அருகேயுள்ள பச்சப்பாளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஜய விநாயகர், பாலமுருகன் கோயிலில் திங்கள்கிழமை(நவ.10) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பச்சப்பாளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஜய விநாயகர் கோயிலில், கன்னிமூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பாலமுருகன், விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா, ஞாயிற்றுக்கிழமை (நவ.9) அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, முதல் கால யாகசாலை, தீபாரதனை நடைபெற உள்ளது.

    திங்கள்கிழமை (நவ.10) அதிகாலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற உள்ளது.

    அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விஜய விநாயகர், பாலமுருகன், பரிவார சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விஜய விநாயகர் கோயில் கும்பாபிஷேக குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai