சுடச்சுட

  

  "பருவ மழையின் தாக்கத்தால் பகல், இரவு வெப்பம் குறைந்திருக்கும்'

  By நாமக்கல்  |   Published on : 08th November 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடகிழக்குப் பருவ மழையின் தாக்கத்தால் நாமக்கல் மாவட்டத்தில் பகல், இரவு வெப்ப அளவுகள் குறைந்து காணப்படும் என்று நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  நாமக்கல் மாவட்ட வானிலையில் அடுத்த 4 நாள்களுக்கு (நவ.8 முதல் 11-ஆம் தேதி வரை) வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், செவ்வாய்க்கிழமை மட்டும் சில இடங்களில் 2 மிமீ மழை பெய்யக்கூடும். காற்றின் திசைவேகம் மணிக்கு 2 கிமீ முதல் 3 கிமீ வேகத்தில் மேற்கு, தெற்கு, கிழக்கு திசைகளில் இருந்து மாறிமாறி வீசக் கூடும். வெப்பநிலை குறைந்தபட்சம் 71.6 டிகிரி பாரன்ஹீட் முதல் அதிகபட்சம் 93.2 டிகிரி பாரன்ஹீட் வரையும், காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 40 சதம் முதல் அதிகபட்சம் 75 சதம் வரை இருக்கும்.

  கோழிப் பண்ணையாளர்களுக்கு..: வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் தாற்காலிகமாக இருக்காது என்றாலும் மீண்டும் அதன் தாக்கம் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் தென்படக்கூடும். இதனால், லேசான முதல் மிதமான வரை மழை கடலோர மாவட்டங்களிலும், லேசான மழையுடன் கூடிய வானிலை உள்மாவட்டங்களிலும் காணப்படும். பகல், இரவு வெப்ப அளவுகள் குறைந்து காணப்படும். இந்த வானிலையில் கோழிகளுக்கு அதிக எரிசக்தியுடன் கூடிய தீவனம் தேவைப்படும். இதைக் கொடுப்பதன் மூலம் முட்டை உற்பத்தி, எடை ஆகியவற்றை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

  கோழியின நோய் கண்டறிதல், கண்காணிப்பு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோழிகள் பெரும்பாலும் குடல்புண், மேல்மூச்சுக்குழாய் நோய்களால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. தவிர, தீவன மூலப்பொருள்களில் கிளாஸ்ட்ரிடியம் கிருமியின் மாசுபாடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பண்ணையாளர்கள் தீவன மூலப்பொருள்களில் நுண்கிருமிகளின் தாக்கம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து தரமான மூலப்பொருள்களை உபயோகிப்பதுடன் பண்ணை உயிர்ப் பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

  வேளாண் விவசாயிகளுக்கு..:

  தற்போது சின்ன வெங்காயம் நடவு செய்யும் பருவம் என்பதால் பூஞ்சான, பாக்டீரியா நோய்களிலிருந்து குமிழ்களை பாதுகாக்க விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியமாகும். ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 500 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். எனவே, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோ டெர்மா விரிடி, 10 கிராம் சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் என்ற அளவில் ஒரு நாள் முன்பே கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai