சுடச்சுட

  

  பி.ஆர்.ராவ் பிறந்த நாள்: பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை விநியோகம்

  By நாமக்கல்,  |   Published on : 08th November 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய கோழிப் பண்ணைத் தொழிலின் தந்தை என புகழப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நிறுவனர் டாக்டர் பி.வி.ராவின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சார்பில், திருச்சி சாலையிலுள்ள செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முதலைப்பட்டியிலுள்ள செல்வம் உயர்நிலைப் பள்ளி, மோகனூர் ராசிபாளைத்திலுள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

  தொடர்ந்து, தினம் ஒரு முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

  நிகழ்ச்சியைத் தொடர்ந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல, வட்டார, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் கூட்டம் நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கோழிப் பண்ணைத் தொழிலுக்கு பி.வி.ராவ் ஆற்றிய பணிகள் நினைவு கூரப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோழிப் பண்ணையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai