ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூட்டம்
By நாமக்கல் | Published on : 09th November 2014 05:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஒன்றிய நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.தனபால் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக இருந்த இருபது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை பதவியுயர்வு அளித்து, நிரப்பியதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் செயலர் டி.அருளாளன், பொருளாளர் பொன்.இனியவன், நிர்வாகிகள் குணாளன், செல்வராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.