சுடச்சுட

    

    சமுதாய நோக்கமிக்கவர்களே சிறந்த ஆசிரியர்கள்

    By ராசிபுரம்,  |   Published on : 09th November 2014 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமுதாயத்தை வழிநடத்தும் ஆசிரியர்கள், இப்படிதான் வாழ வேண்டும் என மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.

    இதையே சமுதாயம் எதிர்பார்க்கிறது என மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார்.

    ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி மகளிர் கல்வியியல் கல்லூரியில் குடிமைப் பயிற்சி முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கான விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் க.சிதம்பரம் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) ந.செந்தில் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற த.ஸ்டாலின் குணசேகரன், குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடக்கிவைத்து வல்லபாய் படேல் உருவப் படத்தை திறந்து வைத்துப் பேசினார்.

    முகாமில் அவர் பேசியது: கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் கல்வி கற்போர் நாற்றங்கால் போன்றவர்கள். சமுதாயத்தின் இரு கண்கள்.

    நல்ல குடிமக்களை உருவாக்கக் கூடியவர்கள் ஆசிரியர்கள் என்பதால், இந்தச் சமுதாயத்தை வழிநடத்தும் ஆசிரியர்கள் எப்படி வாழ வேண்டுமென வாழ்ந்து காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டுமென சமுதாயம் எதிர்பார்க்கிறது.

    புனிதமான ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோர் பணியை நேசிக்க வேண்டும். ஆசிரியர்கள் 2-ஆவது சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றால் அது மிகையாகாது. ஆளுமை, அர்ப்பணிப்பு உணர்வு ஆசிரியர்களுக்கு அவசியம். ஆசிரியர்கள் திருக்குறள் குறித்து தெரிந்து கொள்வதுடன், அதுபற்றிய சிந்தனையை மாணவர்களிடம் தூண்டி விட வேண்டும்.

    மதிப்பெண்கள் என்ற பெயரில் மனிதர்களுக்குப் பதிலாக எந்திரங்களை உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள் இருக்கக் கூடாது. நல்ல மதிப்பெண்களுக்குப் பதில் நல்ல மனிதர்களை உருவாக்குபவர்கள்தான் சிறந்த ஆசிரியர்கள், அதுவே சிறந்த கல்வி.

    நல்ல சிந்தனையாளர்களை, நாட்டுப் பற்று உள்ளவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் ஸ்டாலின் குணசேகரன். கல்லூரி உதவிப் பேராசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முகாமில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai