Enable Javscript for better performance
சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

    திருச்செங்கோடு அருகேயுள்ள வண்டிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் இளையப்பன் (45). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டார்சைக்கிளில் எலச்சிபாளையம் சென்றார். பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கையில், வண்டிநத்தம் அருகில் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai