சுடச்சுட

    

    நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்தார்.

    நாமக்கல் வெள்ளவாரிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜா (59). இவருக்கு மனைவி மணிமேகலை (55), ராகுல் (19), விக்கேஷ் (14) என்ற மகன்களும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.

    ராஜா ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சனிக்கிழமை காலை 6 மணியளவில் ராஜா நடைபயிற்சியை முடித்து விட்டு, வீட்டுக்குச் செல்வதற்காக, நாமக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த நாமக்கல் காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று ராஜாவின் உடலைக் கைப்பற்றி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

    தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai