சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் டிசம்பர் 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் முடிவு செய்துள்ளது.

  இந்தச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் கே.கணேசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.ராஜாசுப்பிரமணியன், பி.உதவியக்குமார், வெ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச்செயலர் மு.சண்முகம் வரவேற்றார்.

  கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்க பவளவிழா வரும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடத்தப்படும். 12,524 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பம்ப் ஆபரேட்டர்கள், கூடுதல் பம்ப் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

  நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். புதிய ஓய்வூதிய முறையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

  துணைப் பொதுச்செயலர்கள் எம்.தமிழ்மணி, ரா.காமராஜ், மாநிலத் தணிக்கையாளர் எஸ்.வெங்கடேசலு உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai