சுடச்சுட

  

  திருச்செங்கோடு கோயில் திருவிழாவில் கம்பம் விடும் நிகழ்ச்சி

  By திருச்செங்கோடு  |   Published on : 09th November 2014 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு மாரியம்மன் கோயில்கள் திருவிழாவின் கம்பம் விடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  திருச்செங்கோடு மாரியம்மன் கோயில்களில் திருவிழா திங்கள்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அம்மன்களுக்கு தினசரி சிறப்பு

  அபிஷேகம், அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கரகம் எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம், தமிழரின் வீர விளையாட்டுகள், பக்தர்களின் மாறுவேடங்கள் ஆகியவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை மாரியம்மன் கோயில்கள் முன் நடப்பட்ட கம்பங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, பெரிய தெப்பக்குளத்தில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  புனித கம்பத்தை பூசாரி சுமந்தபடி வர, அவரைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர். கம்பங்களின் மீது உப்பு, மிளகு, பழங்கள் போன்றவற்றை நேர்த்திக் கடனாகச் செலுத்த பக்தர்கள் எறிந்தனர். சிலர் புறாக்களை கம்பங்களின் மீது வீசினர். புறாக்களைப் பிடிக்க இளைஞர்கள் ஆர்வமுடன் ஓடினர்.

  வழக்கமாக கம்பங்கள் பெரிய தெப்பகுளத்தின் கிழக்குக் கரையில் சிறப்புப் பூஜைகள் செய்து விடப்படும். இந்த முறை தெப்பக்குளம் மழைநீரால் முழுவதும் நிரம்பி இருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று கரைகளிலும் தடுப்புகள் கட்டப்பட்டிருந்தன. போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

  கம்பம் எடுத்து வந்த பூசாரியுடன் 5 பேரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். கம்பங்கள் விடும் போது தவறி விழுதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பரிசல், உயிர் காக்கும் அங்கி போன்றவை தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பாதுகாப்புடன் கம்பங்கள் தெப்பக்குளத்து நீரில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai