சுடச்சுட

  

  முள்ளுக்குறிச்சி அரசு விடுதியில் அதிகாரிகள் ஆய்வு

  By நாமக்கல்,  |   Published on : 09th November 2014 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முள்ளுக்குறிச்சி அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவருக்கு வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை அடுத்து, அந்த விடுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

  மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கு.தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட இந்த ஆய்வின் போது, அரசுப் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

  அதில், விடுதியில் வியாழக்கிழமை இரவு சமைக்கப்பட்ட உணவில் உப்பு அதிகம் இருந்ததாகவும், இதனால், சில மாணவிகள் உணவு அருந்தாமல் இருந்ததாகவும், அதில் வலிப்பு நோய்க்கு

  சிகிச்சைப் பெற்று மாத்திரை உள்கொண்டு வந்த மாணவி ஒருவர் மாத்திரை சரிவர சாப்பிடாத காரணத்தால் மயக்கம் அடைந்ததாகவும், அவரை உடனடியாக அருகே இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். பிறகு விடுதிக் காப்பாளர், சமையலர்களை அழைத்து தனித் தனியாக விசாரிக்கப்பட்டதுடன், சமைத்த பிறகு உணவைச் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்த பிறகே மாணவிகளுக்கு பரிமாற வேண்டும் என்றும், வழங்கப்படும் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

  மேலும், உணவு மூலப்பொருள்கள் வைக்கும் அறையையும், உணவுப் பொருள்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், காலாவதி தேதி, தயாரிப்பு தேதி, முகவரி முதலிய விவரங்களை குறிப்பிட வேண்டும் என்றும், உணவு மூலப்பொருளில் எந்த ஒரு சந்தேகமும் இருக்குமானால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai