சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

    திருச்செங்கோடு வட்டம், மோர்பாளையத்தை அடுத்துள்ள கூத்தாநத்தம் கிராமம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜா (25). இவர் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் கொல்லபாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு பிறந்து 17 நாள்களான தனது ஆண் குழந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கூட்டப்பள்ளி என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு வாகனம் அவரது பைக்கில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai