Enable Javscript for better performance
நாமக்கல்லில் 350 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி சீருடை அணிந்து ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 350 பேரை நாமக்கல் போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி தலைமையில் பொதுக் கூட்டம், பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் சுமார் 350 பேர் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சீருடையுடன் வந்தனர். பின்னர், அங்கிருந்து ஊர்வலம் செல்ல

    முயன்றனர்.

    அப்போது நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தி, அனுமதியின்றி சீருடையுடன் ஊர்வலம் செல்லக் கூடாது எனத் தெரிவித்தனர்.

    ஆனால், அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனால், அவர்களை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அவர்கள் இரவு

    விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai