சுடச்சுட

  

  பெரியார் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி

  By ராசிபுரம்  |   Published on : 10th November 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் பெரியார் பல்கலைக்கழக நூலகம், தகவல் அறிவியல் துறை மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி முகாம் மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தப்பட்டது.

  இந்தப் பயிற்சியில், நூலகத்தின் செயல்பாடுகள், சிறந்த நூலகம், சேவைகள், பொறியியல் கல்லூரியில் சிறந்த நூலகராகச் செயல்படுவது எப்படி என்பன போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

  பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களை கல்வி நிறுவனத் தாளாளர் எம்.ஜி.பாரத்குமார், செயல் இயக்குநர் ஆர்.சாம்சன் ரவீந்திரன், முதல்வர் எம்.மாதேஸ்வரன், தலைமை நூலகர் எம்.தேவநாதன், பல்கலைக்கழக நூலகப் பேராசிரியர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai