சுடச்சுட

    

    எஸ்.சி.(ஏ) சான்றிதழ் வழங்கக் கோரி அருந்ததிய சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

    By நாமக்கல்  |   Published on : 11th November 2014 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருந்ததியர் சமூகத்தினருக்கு எஸ்.சி.(ஏ) சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலர் பி.ஆர்.ராமசாமி தலைமை வகித்தார். இதில், அருந்ததியர் சமூகத்தினருக்கு எஸ்.சி.(ஏ) சான்றிதழ் வழங்கக் கோரி முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து பி.ஆர். ராமசாமி கூறியது:

    தமிழகத்தில் தலித்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர் சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால், தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் அருந்ததியர் சமூகத்தினரை எஸ்.சி.(ஏ) என்று குறிப்பிடுகிறது. ஆனால், ஜாதிச் சான்றிதழ்களில் எஸ்.சி.(ஏ) என்ற நிலையான ஜாதிச் சான்றுகள் வழங்காமல் பொதுவாக எஸ்.சி. என குறிப்பிட்ட சான்றிதழ்களே அருந்ததியர் சமூக மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால், அரசின் சலுகைகளைப் பெறுவதில் பல்வேறு குழப்பங்களும், தேவையற்ற சச்சரவும் ஏற்படுகின்றன.

    இதைத் தவிர்க்கும் வகையில் எஸ்.சி. என்ற ஜாதிச் சான்றிதழ்களுக்கு பதிலாக எஸ்.சி.(ஏ) என குறிப்பிட்ட ஜாதிச் சான்றிதழ்களை வழங்க ஆதிதிராவிடர் நலத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இந்தக் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai