Enable Javscript for better performance
எஸ்.டி. சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.டி. சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார்

    By நாமக்கல்,  |   Published on : 11th November 2014 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தினருக்கு எஸ்டி ஜாதிச் சான்றிதழ் வழங்காமல் 2 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.

    தமிழ்நாடு பழங்குடி மலையாளி (எஸ்டி) கூட்டமைப்பு நலச் சங்கம் சார்பில், அதன் மாநிலத் தலைவர் கே.சி.கனகராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அந்த சமூதாய மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியை சந்தித்து திங்கள்

    கிழமை மனு அளித்தனர்.மனு விவரம்:

    ராசிபுரம் வட்டம். வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் இருந்து இந்து மலையாளி (எஸ்டி) ஜாதிச் சான்றிதழ் கோரி, 200-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

    இரண்டு ஆண்டுகளான போதும், இதுவரை அவர்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவர்கள் அளித்த மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி மலையாளி சமூகத்தினருக்கு எஸ்டி ஜாதிச் சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai