சுடச்சுட

    

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகள் அகற்றம்

    By ராசிபுரம்,  |   Published on : 11th November 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரத்தில் நகராட்சி நிர்வாகம், வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துப்புரவு பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடியால் தொடக்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகள் அகற்றும் பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராசிபுரம் நகராட்சி நிர்வாகம், வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பைகளை அகற்றும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டன.

    இதில், நகராட்சி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் இணைந்து, ராசிபுரம் நகரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் காலனியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, இந்தப் பணிகளை அந்தப் பள்ளியின் தாளாளர் ஜி.வெற்றிச்செல்வன், நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

    இதில் அந்தப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.ஜேம்ஸ் டேனியல் அற்புதராஜ், சிபிஎஸ்சி பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.தினேஷ்குமார், ஆசிரியர் வி.சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் ஏ.லோகநாதன், அங்குராஜ், ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai