சுடச்சுட

    

    நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகப் புகார்

    By நாமக்கல்,  |   Published on : 11th November 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இருக்கூர் பகுதி நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர் வட்டம், இருக்கூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொருள்களைப் பெற்று வருகின்றனர். கடந்த சில நாள்களாக அந்த நியாய விலைக் கடையில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி தரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

    இந்த நிலையில், சனிக்கிழமை வழங்கப்பட்ட அரிசியில் அதிகளவில் புழுக்கள் இருந்ததுடன், அரிசி நனைந்து துர்நாற்றம் வீசியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சமூக ஆர்வலர் பொன்னரசன் தலைமையில் அந்தப் பகுதி மக்கள், புழுக்கள் நிறைந்த அரிசியுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். அவர்கள் கூறியது:

    தரமற்ற நிலையிலுள்ள அரிசியை நியாய விலைக் கடைகளில் வழங்குவதால், ஏழை மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் கேட்டால் தங்களுக்கு வரும் அரிசி அப்படிதான் உள்ளது என்கின்றனர். எனவே, நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai