சுடச்சுட

    

    சேந்தமங்கலம் பகுதியில் புதிய திரைப்பட டிவிடிக்களை விற்றதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் புதிய திரைப்பட டிவிடிக்கள் விற்பனை செய்வதாக சேந்தமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் தலைமையிலான போலீஸார் சேந்தமங்கலம் பகுதியிலுள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, ஒரு கடையில் கத்தி, பூஜை, அரண்மனை, அஞ்சான் உள்ளிட்ட புதிய திரைப்படங்களின் டிவிடிக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் முருகனை (38) போலீஸார் கைது செய்தனர். இதேபோல, புதுச்சத்திரம் அருகே, குருசாமிபாளையம் பகுதியில் புதுச்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கடையில் புதிய திரைப்படங்களின் டிவிடிக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளர் மல்லூரை சேர்ந்த பூபாலை (32) போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் இருந்து 25 டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai