சுடச்சுட

  

  மாவட்ட கபடிப் போட்டி: நாமக்கல் பெண்கள் அணி முதலிடம்

  By ராசிபுரம்  |   Published on : 11th November 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் அருகே, ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஸ்டார் நண்பர்கள் குழு சார்பில், மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கபடிப் போட்டியில் நாமக்கல் மாவட்ட பெண்கள் அணி முதலிடத்தைப் பெற்றது.

  பெண்களுக்கான போட்டியில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, குமாரபாளையம் ராஜீவ்காந்தி அணி, கே.எல்.கே.சி.கே., அணி, மேட்டூர் ஜான்சிராணி அணி, ஜலகண்டாபுரம் கரிகாலன் அணி, சேலம் அம்மன் பிரதர்ஸ் அணி உள்ளிட்ட அணிகள் பங்கேற்று லீக் முறையில் விளையாடின.

  இந்தப் போட்டியில் நாமக்கல் விளையாட்டு மேம்பாட்டு அணி 35 புள்ளிகளைப் பெற்று முதலிடமும், சேலம் அம்மன் பிரதர்ஸ் அணி 20 புள்ளிகளைப் பெற்று 2-ஆம் இடமும், மேட்டூர் ஜான்சிராணி அணி மூன்றாமிடத்தையும், கே.எல்.கே.சி.கே., அணி நான்காமிடத்தையும் பெற்றன.

  போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், கோப்பையும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், கோப்பையும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், கோப்பையும், நான்காம் பரிசு ரூ. 1,500 கோப்பையும் வழங்கப்பட்டன.

  ஆண்களுக்கான போட்டியில், தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மல்லூர், ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், மேச்சேரி, திருச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் தம்மம்பட்டி அணி 19 புள்ளிகளைப் பெற்று முதல் இடமும், கரூர் அணி 14 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடமும், ஆர்.புதுப்பாளையம் ஸ்டார் அணி மூன்றாமிடமும், சேலம் அன்னை தெரசா அணி நான்காமிடத்தையும் பெற்றன.

  போட்டியில், முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம், கோப்பையும், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், கோப்பையும், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம், கோப்பையும், நான்காம் பரிசு ரூ. 3 ஆயிரம், கோப்பையும் வழங்கப்பட்டன.

  பரிசளிப்பு விழாவுக்கு ஆர்.புதுபாளையம் ஊராட்சித் தலைவர் ஆர். ராமசாமி தலைமை வகித்தார்.

  ஒன்றிய உறுபபினர் பழனியம்மாள் வரவேற்றார். உறுப்பினர்கள் எஸ்.செந்தமிழ்செல்வன், எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிக்களுக்கு பரிசுத்தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai