சுடச்சுட

    

    முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By ராசிபுரம்  |   Published on : 11th November 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகம் முன் அனைத்து இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பி.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார் வரவேற்றார். நகரத் தலைவர் ஆர்.சாந்தாராம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இக்பால், கலைவாணன், சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மக்கள் உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தொடங்க வேண்டும். வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். பால்விலை, மின் கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விதவை, முதியோர் உதவித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்களின் உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், அந்தச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.சந்திரமோகன், ராசிபுரம் நகரத் தலைவர் ஆர். நாகராஜன், சங்க உறுப்பினர்கள் ஜி. ஹரிஹரன், எஸ்.சுப்பிரமணி, எம்.சங்கீதா, எஸ்.கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai