ஆங்கில வழி வகுப்புக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
By நாமக்கல் | Published on : 12th November 2014 12:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கென கூடுதலாக ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். வட்டார செயலர் சு.சரவணன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தமிழக ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கிகளில் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 வசூலிப்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும். மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கியுள்ள ஆங்கிலவழி வகுப்புகளுக்கு தனியாக கூடுதல் ஆசிரியரை நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் து.ராமராசு, துணைச் செயலர் பெ.சரவணகுமார், வட்டாரத் தலைவர்கள் த.நாகராஜன், ஆ.வசந்தகுமாரி, ம.செந்தில்குமார், சேந்தமங்கலம் வட்டாரச் செயலர் ஆர்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.