Enable Javscript for better performance
கிணற்று நீரில் மூழ்கி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    எருமப்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் முரளி(21). பிஏ தமிழ் இலக்கியம் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். இவரது நண்பர் சுப்பிரமணி்(25) உள்பட 5 பேருடன் அப்பகுதியிலுள்ள பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக முரளி, சுப்பிரமணி ஆகிய இருவரும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். அவரது நண்பர்கள் மேற்கொண்ட முயற்சியால் சுப்பிரமணி மீட்கப்பட்டார். ஆனால், முரளி நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்ததும் நாமக்கல் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று முரளியின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, எருமப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai